ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன பேருந்துகளில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடப்பட்டு வந்தது. இது குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், பாணாவரம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின்போது, பேருந்துகளில் இருந்து டீசலைத் திருடிக் கொண்டிருந்த இருவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் நெமிலியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் மகேந்திரவாடியைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது.
கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி இவர்களைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து டீசல் மற்றும் திருட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
