
வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன். இவர் பல சமயங்களில் கேப்டன் ஆகவும் செயல்பட்டுள்ளார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நிலையில் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகள், 247 ஒருநாள் போட்டிகள், 117 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் மைதானத்தில் ஷகிப் சகவீரர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் ஷகிப்புடன் செல்பி எடுக்க முயற்சி செய்தார். இதனால் அவர் கோபத்தில் ரசிகரின் செல்போனை புடுங்க முயற்சி செய்தார். அதோட அந்த ரசிகரின் கழுத்தைப் பிடித்தும் தாக்கினார். இதைத்தொடர்ந்து சோகமாக அந்த ரசிகர் அங்கிருந்த சேரில் அமர்ந்தார். மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் ஷகிப்புக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
Shakib al Hasan 🇧🇩🏏 went to beat a fan who tried to take a selfie 🤳
Your thoughts on this 👇👇👇 pic.twitter.com/k0uVppVjQw
— Fourth Umpire (@UmpireFourth) May 7, 2024