இந்தியாவை விட சீனா மிக வேகமாக முன்னேறி கொண்டே வருகிறது. கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலை போன்ற அனைத்திலும் முன்னேறி கொண்டே வருகிறது. அதற்கு பெரும்பாலும் செயல்முறை கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவது காரணம் என பல கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வியை நவீனமயமாக்குவதை சீன நாட்டினை நவீனமயமாக்குவதற்கான முக்கிய காரணம். ஏனெனில் கல்வியை மனப்பாடம் செய்யும் கற்றல் முறையினை சீன நாட்டினர் சமீப காலமாக குறைத்துக் கொண்டே வருகின்றனர். கற்றலுக்கு சீன நாட்டினர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
விவசாயம், கைவினைப் பொருட்கள் செய்தல் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் போன்ற அனைத்தையுமே சீன நாட்டினர் கற்று தருகின்றனர். இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியே மாற்றி வீட்டிலேயை பாடங்கள் கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறது.
மேலும் வகுப்பறை நேரம், விவாதங்கள் சிக்கல்களை தீர்க்கும் திறன், கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்துவது போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் கருவிகள் மற்றும் தளங்களின் வளர்ச்சியுடன் சேர்த்து கற்றல் செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபட்ட ஆசிரியர்கள் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து கொண்டே வருகின்றனர்.
தொழில்நுட்பம் வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. சீனாவில் மட்டுமே மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பத்திற்கேற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது. ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகளையும், கற்றலின் வேகத்தையும் மாற்றியமைக்கும் வழிமுறைகள் பயன்படுத்தப்படுகிறது.
மென்பொருள் உதவியுடன் ஆசிரியர் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் கற்றல் முறைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படுகிறது. இதனாலே சீனா நாட்டினர் தொழில்நுட்பங்களால் வேகமாக மாறிவரும் உலகில் முதன்மையில் நிற்கின்றனர். இது அடுத்த தலைமுறையே முனைப்புடன் உருவாக்குகிறது.
