சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸப் போன்றவற்றை வெளியாகும் அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி எந்த ஒரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. அப்படி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால் அதற்கான முன்னறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதனைத் தவிர தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் மற்றும் வேலை வாய்ப்பு செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும். எனவே வேறு எந்த ஒரு இணையதளம் மற்றும் வாட்ஸ் அப்பில் வெளிவரும் போலியான சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்புச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் இது போன்ற செய்திகளை வெளியிடுவோம் இது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.