தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்றுள்ளார். இவர் தொழிற்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்தத் துறையின் அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பால்வளத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சருக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித் துறையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழனிவேல் தியாகராஜன் ‌ நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஆடியோ விவகாரம் தான் காரணம் என தற்போது எதிர் கட்சிகள் விமர்சித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமாரும் 30000 கோடி பதுக்கல் உண்மை என்பதால் தான் நிதியமைச்சர் மாற்றப்பட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளார். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்த பிறகும் அவரை பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி  திமுக கட்சி அவரை டம்மி ஆக்கியுள்ளது. அவர் அமைச்சரவையிலும் கடைசி இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.