சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பணம் இல்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும். இந்த நடைமுறையானது மிகவும் திறமையான மற்றும் வசதியான கட்டண முறையாகவும் பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய காரணத்தாலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் மூலமாக பயணிகள் பெற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் வாகனம் நிறுத்தும் இடங்களிலும் இந்த பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறை வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் அதனால் அனைத்து பயணிகளும் விரைவாக பயண அட்டையை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
