தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் மருத்துவத் துறை ரீதியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் மருத்துவத்துறையில் 1,021 மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். மேலும் மருத்துவ துறையில் இருக்கும் காலியிடங்கள் முதல்வரின் அறிவுறுத்தலை பின்பற்றி விரைவில் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.