வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு இடையம் பட்டியில் லூர்து மேரி என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவர் சென்னை கோட்டை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் போலீசார் லூர்து மேரியை தடுத்து நிறுத்தினர். அப்போது லூர்து மேரி ஒரு கோரிக்கை மனுவை போலீசாரிடம் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது வீட்டை அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர் இடித்து விட்டார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். அந்த மனுவை வாங்கிக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் லூர்து மேரி கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.