சென்னை அயனாவரம் பகுதியில், கூரியர் டெலிவரி செய்வதற்காகச் சென்ற ஆகாஷ் என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தை சாவியுடனே சாலையில் நிறுத்திவிட்டுச் சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பைக்கைத் திருடிச் சென்ற அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
கூரியரை வழங்க ஆகாஷ் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்தத் திருடன், சாலையில் சாதாரணமான முறையில் நடந்து சென்று சாவியுடனே நின்று கொண்டிருந்த வாகனத்தைக் கவனமாகக் நோட்டமிட்டு, அதனை எளிதாகத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அந்த இளைஞரைத் தேடி வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், கூரியர் டெலிவரி செய்வதற்காக சாலையில் வாகனத்தை சாவியுடன் நிறுத்திவிட்டு டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் கேஷுவலாக நடந்து சென்ற இளைஞர் ஒருவர் சாவியுடன் உள்ள இருச்சக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடிச் செல்லும் சிசிடிவி… pic.twitter.com/kTVlf1I99J
— PttvOnlinenews (@PttvNewsX) November 3, 2025
“>
