சென்னையில் லாரிகளில் குடிநீர் பெற இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அறிவிப்பு : சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044- 45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.