சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் செயினை பறித்து தப்பிய இளைஞர். இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் நடந்ததும் திருவான்மியூர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், செயின் பறித்த நபரின் முகம் தெளிவாக பதிவாகியிருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு சோதனையை தீவிரப்படுத்திய போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட இளைஞரை  கைது செய்தனர். தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

“>