இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது.. அதில் ரயில் நிலையத்தில் மனிதர்களின் சுகாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் சமோசா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு வியாபாரி, தனது வண்டியுடன் ஒரு ரயிலில் இருந்து மற்றொரு ரயிலுக்கு மாறிக் கொண்டிருந்தபோது, சமோசா நிறைந்த வாளி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது.
சமோசாக்கள் நேரடியாக தண்டவாளத்தில் விழுந்தன. அந்த இடம் தூசி, பாதாள அழுக்கு, எண்ணெய் மற்றும் கழிவுநீர் படிந்த தண்டவாளம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அதில் எந்த தயக்கமுமின்றி, குறித்த வியாபாரி அதே சமோசாக்களை மீண்டும் அந்த வாளியில் அள்ளி, அதை விற்பனைக்கு எடுத்துச் சென்ற காட்சிகள் அங்கு இருந்த ஒருவர் எடுத்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இது சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி, பொதுமக்களில் கோபம் மற்றும் கண்டனத்தை கிளப்பியுள்ளது. “அவசரமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வியாபாரியின் உரிமத்தை பரிசீலிக்க வேண்டும்” என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
