சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறுவதால்  நேற்று மற்றும் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

அதன்படி, அண்ணா மேம்பாலம் செல்லும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திரும்பி விடப்படும் . அண்ணா மேம்பாலத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.