மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு மத்திய அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் இது வரை அது நடத்தப்பட்டு இல்லை என அவர் வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் சின்னப்பிள்ளைக்கு வீடு கட்டித்தரப்படும் எனக்கூறி அதற்கான ஆணையை தமிழக அரசு அவருக்கு வழங்கியது.

இந்நிலையில் இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சின்னப்பிள்ளைக்கு வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது கண்டிக்கத்தக்கது. குற்றச்சாட்டு திமுக அரசின் மீதுதான் என்பது கூடத் தெரியாமல் முதல்வர் அரசியல் செய்கிறார். மத்திய அரசு நிதியில் மாநில அரசு மூலம் செயல்படுத்தும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம் என கூறியுள்ளார்.