தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிப்பால் சென்னையில் காற்று மாசு இதுவரை இல்லாத வகையில் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக தமிழகத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மக்கள் நேர கட்டுப்பாடு இல்லாமல் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

இதனால் சென்னையில் காற்று மாசு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக மணலியில் 316 மற்றும் வேளச்சேரியில் 301 என தர குறியீடு பதிவாகியுள்ளதால் அப்பகுதியில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனைப் போலவே அரும்பாக்கம், ஆலந்தூர், ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் காற்று தரம் மோசமாக மாறியுள்ளது.