தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அரசு பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் நேர கட்டுப்பாடு இல்லாமல் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

இதன் விளைவாக சென்னையில் வேளச்சேரி மற்றும் மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மினி லாக் டவுன் போடும் அளவுக்கு காற்று மாசு அதிகரித்து உள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் குறிப்பாக ஆஸ்துமா, இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உடல்நல பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.