சென்னையில் விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணி நடைபெறுவதால் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நெடுங்குன்றம் சாலை, துரை சம்பத் சாலை மற்றும் ஐயப்பன் நகர் முதல் பிரதான சாலை வழியாக மீண்டும் காளியம்மன் கோவில் தெருவை அடைந்து கோயம்பேடு செல்லலாம் எனவும் கோயம்பேட்டிலிருந்து விருகம்பாக்கம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல எந்த மாற்றமும் இல்லாமல் செல்லலாம் எனவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.