டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த திங்கள் கிழமை மாலை நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவம், நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மருத்துவர் முஹம்மது உமர் நபி, குண்டுவெடிப்புக்குச் சில மணி நேரங்களுக்கு முன் ஓல்டு டெல்லியில் உள்ள மசூதிக்குச் சென்று வந்திருக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
ராம்லீலா மைதானம் எதிரே, துர்க்மன் கேட் அருகில் அமைந்துள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்கு டாக்டர் நபி சென்றுள்ளார். அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை இருந்த அவர், மதியம் 2:30 மணியளவில் அங்கிருந்து செங்கோட்டையை நோக்கி ஆசஃப் அலி சாலையில் நடந்து சென்றுள்ளார். மாலை 6:52 மணிக்குச் செங்கோட்டை மெட்ரோ நிலையம் வாயில் எண் 1-க்கு வெளியே, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தனது ஹூண்டாய் ஐ20 காரை அவர் வெடிக்கச் செய்துள்ளார்.
New CCTV Footage Shows Umar Entering a Mosque Near Turkman Gate He Visited the Mosque Before Reaching the Red Fort Parking Area pic.twitter.com/IzWRsGU5qz
— THE UNKNOWN MAN (@Theunk13) November 13, 2025
“>
முன்னதாக, பகல் 3:19 மணியளவில் சுனேஹரி மசூதியின் கார் நிறுத்தும் இடத்தில் டாக்டர் நபி காரை ஓட்டிச் சென்ற காட்சி, மேலும் ஒரு சிசிடிவி பதிவில் பதிவாகியிருந்தது. இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர் டாக்டர் நபிதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. குண்டு வெடிப்பில் சிதறிய எலும்புகள், பற்கள் மற்றும் ஆடைகளின் துண்டுகள் ஆகியவற்றில் இருந்து மீட்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள், நபியின் தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, புல்வாமாவில் நபியின் தாயார் டிஎன்ஏ சோதனைக்காகக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு கார் டீலரிடம் இருந்து அக்டோபர் 29-ஆம் தேதி காரை வாங்கிய டாக்டர் நபி, அதே நாளில் மாசு கட்டுப்பாட்டு (PUC) சான்றிதழும் பெற்றுள்ளார்.
தாக்குதலுக்கு முன்னர், ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுமார் 11 நாட்கள் காரை நிறுத்தி வைத்திருந்ததாகவும், தாக்குதல் நடந்த நவம்பர் 10-ஆம் தேதி காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாக்டர் நபியின் கூட்டாளிகள் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டதால், கைது பயத்தில் அவர் இந்தத் தாக்குதலை அவசரமாக நடத்தியிருக்கலாம் எனவும் புலனாய்வுத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
