இந்தியாவில் சுயதொழில் செய்ய விரும்புவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல் மானியமும் வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமானவர் பயன்படுத்த வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் சுய தொழில் தொடங்க அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகின்றது.

அதன்படி நாட்டுக்கோழி வளர்ப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் மானிய உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. அந்த வகையில் 250 கோழிகள் கொண்ட சிறிய அளவிலான பண்ணைகளை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்குகின்றது. அதாவது கொட்டகை, உபகரணங்கள் மற்றும் தீவன தட்டு வாங்க 1,53,875 மானியம் கிடைக்கும். மேலும் 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்.