பிரபலவிஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்  நீயா நானாவில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தன்னுடன் நடனம் ஆட சொல்லும் மனைவி மற்றும் ஆட மறுக்கும், கூச்சப்படும் கணவன் என்ற தலைப்பில்  தன்னுடன் நடனமாட தயங்கும் கணவர்களை  மனைவிகள் விடாமல்  ஆட வைப்பதுடன், அவர்களை பேச முடியாத அளவிற்கு மூச்சிரைக்கவும் செய்துள்ளனர். இதில் கணவர் எப்பவுமே தான் எப்படி நடனம் ஆடினாலும் அதனை கண்டு கொள்ளவே மாட்டார் என்று தன்னுடைய கணவரை பெண் ஒருவர் கோபிநாத்திடம் மாட்டிவிட்டுள்ளார் .

இதற்கு சதரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது அவரையும், மனைவியும் அழைத்து ஆட வைத்துள்ளார் கோபிநாத். இதற்காக படையப்பா படத்தில் இருந்து சுற்றி சுற்றி வந்தீங்க என்ற பாடல் போடப்பட்டது. கணவருக்கு ஆட தெரியாவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக தன்னால் முடிந்த வரை முழு ஆதரவையும் கொடுத்து ஆடினார்.