பிரபல எடிட்டர் கேபி ஹரிஹரபுத்திரன் (79) காலமானார். தமிழில் தென்காசிப்பட்டணம் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றிய இவர், மம்மூட்டியின் சாம்ராஜ்யம், திலீப்பின் பஞ்சாபி ஹவுஸ் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மலையாள சினிமா இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால், இவரின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது மறைவிற்கு பினராயி விஜயன், திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.