சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் இனியா. இதில் கதாநாயகனின் தங்கையாக நடித்து வருபவர் பிரீத்தா ரெட்டி. இவர் சிறகடிக்க ஆசை தொடரிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இரண்டு தொடர்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க சிரமமாக இருப்பதால் இவர் இனியா தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.