இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார். கும்பகோணத்தை சேர்ந்த இவர் சென்னையில் தனது அண்ணனின் நிறுவனத்தை கவனித்து வந்த போது திடீரென மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். மறைந்த கேசவனின் மகன் வினோத், கோலிசோடா 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் லிங்குசாமி தயாரித்த நான்தான் சிவா படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார்.