நடிகர் விஜய் தற்போது ஆக்சன் படங்களில் நடித்து வரும் நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் காதல் படங்களில் மட்டுமே தான் நடித்து வந்தார். அந்த படங்கள்தான் அவரை ஒரு முன்னணி ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் முன்னிறுத்தியது என்று சொல்லலாம். விஜயின் முதல் வெற்றி படம் பூவே உனக்காக திரைப்படத்தில் தொடங்கி அடுத்தடுத்து காதல் படத்தில் நடித்து காதல் இலவரசராக வளம் வந்தார். விஜய் இப்படி 25 படங்கள் வரை காதல் கதை களத்தில் நடித்து வந்த விஜய் காதல் என்றால் என்ன என்பதை பற்றி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.

விஜய் தற்போது தன் படங்களின் இசை வெளியீட்டு வெளியீட்டு விழாவில் மட்டுமே பேசி வருகிறார். ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுப்பதில்லை .எனவே விஜய்யின் பழைய பேட்டிகளை ரசிகர்கள் அவ்வப்போது வைரல் ஆக்கி வருகிறார்கள். அந்த வகையில் சச்சின் திரைப்படத்தின் போது விஜய் கொடுத்த ஒரு பேட்டி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் தொகுப்பாளர் விஜய்யிடம் காதல் என்றால் என்ன? என்று கேட்பதற்கு விஜய் காதல் என்றால் புரிதல். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கு பெயர்தான் காதல் என்று கூறியுள்ளார். இந்த பழைய பேட்டி வைரல் ஆகி வருகிறது.