திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகளின் தூக்கத்தைக் கலைத்துள்ளது. “திமுக 2.0 ஆட்சியில் இனி சீனியாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்; களத்தில் நின்று உழைப்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம்” என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். குறிப்பாக, வரவிருக்கும் தேர்தலில் தங்களது மாவட்டத்தில் அதிக தொகுதிகளை வென்று கொடுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கே அமைச்சர் பதவியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் ‘செக்’ வைத்துள்ளார்.
அதேபோல், மண்டல பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். “உழைப்புக்கு மட்டுமே பரிசு” என்ற முதல்வரின் இந்த அதிரடி மாற்றத்தால், திமுக நிர்வாகிகள் இப்போது முதல் தேர்தல் வேலைகளில் வேகம் காட்டத் தொடங்கியுள்ளனர்!
