இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் அதன் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் தாக்கத்திற்கு பின்னர் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரிக்கவில்லை. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில்ஆப்பிள் நிறுவன செல்போன்கள் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன லேப்டாப்கள் செல்போன்கள் விற்பனை இருமடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் விற்பனையில் சீனா சரிவை சந்தித்துள்ளது.