சீனாவின் ராணுவ நடவடிக்கையால் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நியூசிலாந்து தள்ளப்பட்டுள்ளது. சீனா ராணுவத்தை நவீன மயமாக்க அதிக முதலீடு செய்து வருகிறது. அதன் காரணமாக பசுபிக் பகுதியில் உள்ள நியூசிலாந்து தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து நியூசிலாந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்று வெளியிட்டார்.

அதில் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு செலவு பொருளாதாரத்தில் ஒரு சதவீதமாக உள்ளது என்றும் சைபர் தாக்குதல்கள் பயங்கரவாதம் போன்ற உள்நாட்டுச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.