வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாதம்தோறும் 1 ஆம் தேதி மாற்றி அமைக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஜூன் 1ஆம் தேதி வரை விலை மாற்றம் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமையும் புதிய அரசை பொருத்து சிலிண்டர் விலை மாறலாம் என கூறப்படுகிறது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் 918 ரூபாய்க்கும், வர்த்தக சிலிண்டர் 1960 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.