இந்தியாவில் ஏப்ரல் 1ஆம் தேதி இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்குகின்றது. அதனால் பணம் குறித்த சில விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளது. புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 தொடங்க உள்ள நிலையில் தனிநபர் நிதி, முதலீட்டு திட்டம், பாஸ்டேக், பிஎஃப் என பல மாற்றங்கள் வர உள்ளன .

ஆதார் – பான் கார்டு இணைப்பு:

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நேற்றுடன் அவகாசம் நிறைவடைந்தது. எனவே இன்று  ஏப்ரல் 1 முதல் பான் கார்டு ரத்து செய்யப்படும்.

சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

தேசிய பென்ஷன் திட்டம்:

புதிய நிதியாண்டு தொடங்க இருப்பதால் தேசிய பென்ஷன் திட்டத்தில் மாற்றம் இருக்கும். இதன் கணக்கில் உள்நிலையை இரண்டு காரணி அங்கீகாரம் தேவைப்படும். தேசிய பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரர்கள் ஆதார் சரிபார்ப்பு மற்றும் மொபைலில் பெறப்பட்ட ஓடிபி மூலம் உள்நுழைய வேண்டும் போன்ற புதிய விதிகள் அமலாகும் நிலையில் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

கிரெடிட் கார்டு:

SBI கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு வாடகையை செலுத்தினால் அவர்களுக்கு ரிவார்டு பாயிண்டுகள் கிடையாது. இந்த மாற்றம் சில கிரெடிட் கார்டுகளுக்கு ஏப்ரல் 15 முதல் பொருந்தும்.

EPFO மாற்றம்:

வேலை மாறினால் உங்களுடைய பழைய பி எப் ஆட்டோ பயன்முறையில் மாற்றப்படும். இந்த புதிய விதி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

Fastag:

பாஸ்டேக் கணக்கின் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி இன்று  முதல் கணக்கு வங்கியால் முடக்கப்படும். பிறகு உங்கள் கணக்கில் பேலன்ஸ் இருந்தாலும் பணம் செலுத்த முடியாது.

வங்கிகள் விடுமுறை: ஏப்ரல் மாதத்தில் மொத்தம் எட்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

கார் , பைக் விலை:

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏப்ரல் 1 முதல் மாற்றம் செய்ய உள்ளது. அதனால் வாகனங்களின் விலையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.