கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு ஹோட்டல், மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளியிட்டுள்ள ‘பிரியாணி ஆஃபர்’ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

ஓசூர் தளி சாலையில் உள்ள இந்த ஹோட்டல், ஒரு வணிக சிலிண்டர் (Commercial Cylinder) கொடுப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்றும், இரண்டு சிலிண்டர்கள் கொடுத்தால் தினமும் இரண்டு பிரியாணிகள் இலவசம் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாட்டால் ஹோட்டலை மூடும் நிலை வந்தபோது, ஒரு பழைய வாடிக்கையாளர் கொடுத்த யோசனையின் அடிப்படையில் இந்த ‘பிரியாணி சந்தா’ (Biryani Subscription) திட்டத்தை ஹோட்டல் உரிமையாளர்  அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த வினோத அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, இரண்டு வாடிக்கையாளர்கள் தங்களது உபரி சிலிண்டர்களை ஹோட்டலில் ஒப்படைத்துவிட்டு, தினமும் இலவசமாகப் பிரியாணி சாப்பிட்டுச் செல்லும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.