தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக ஜி.கே வாசன் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று 11.45 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய ஜிகே வாசன் 12.12 மணிக்கு தான் கரெக்டாக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறினார். இது எங்களுடைய கட்சியின் செண்டிமெண்ட் என்றும் அவர் தெரிவித்த நிலையில் பின்னர் அவர் சொன்ன நேரத்தில் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். மேலும் அதன்படி,
ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர்
ஈரோடு மேற்கு – எம்.யுவராஜா
கிள்ளியூர் – ஜெ.நிவின் சைமன்
கும்பகோணம் – எம்.கே.ஆர்.அசோக் குமார்
ராணிப்பேட்டை – வி.எம்.கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
