நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினிகாந்தை சமீபத்தில் நேரில் சென்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொன்ன போது அவரை மிகவும் விமர்சித்தார். குறிப்பாக நடிகர் ரஜினியை கன்னடக்காரர், பாஜகவின் பி டீம் என்றெல்லாம் சீமான் விமர்சித்திருந்த நிலையில் அவரை திடீரென சந்தித்தார்.

அதாவது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அவருடைய அரசியல் வருகை சீமானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதால் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் நோக்கத்தில் ரஜினியை நேரில் சென்று சீமான் சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதனை தற்போது எம்ஜிஆர் பாடலுடன் இணைத்து சீமானை கலாய்க்கும் விதமாக ஒரு வீடியோவை நெட்டிசன்கள் வைரல் ஆக்கினார்கள். அதோடு அன்று ரஜினிகாந்தை வடக்கன் என்று விமர்சித்த உங்களை தற்போது என்னுடைய தலைவன் தளபதி அவருடைய காலில் சென்று விழவைத்துள்ளார் என்று அதில் பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.