சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, தேசப்பற்று என்பது வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலில் உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த வீடியோவில், சாலையில் ஒரு சிறுமியின் கையிலிருந்த தேசியக் கொடி எதிர்பாராதவிதமாக கீழே விழுவதைக் காணலாம்.
ஆனால் அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், கொடி தரையில் விழுந்ததைக் கண்ட அடுத்த நொடியே, சற்றும் யோசிக்காமல் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று அந்த தேசியக் கொடியை மரியாதையுடன் எடுத்து மீண்டும் அந்தச் சிறுமியிடம் ஒப்படைக்கிறார்.
saw a very cute proud moment with my Rapido driver today.
a very cute girl waving the tricolour dropped it when my captain got out, cleaned it and returned with so much love❤️ the smile both had 🥹🫡 pic.twitter.com/QU52M4r8d1
— Ananya Singh (@emo_ananya) January 26, 2026
“>
இந்தச் சிறிய அர்த்தமுள்ள செயல், இணையவாசிகளின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. “நிஜமான ஹீரோக்கள் இவர்கள்தான்” என்றும், தேசத்தின் மீதான அவரது மரியாதையைக்கண்டு வியப்பதாகவும் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் சாமானிய மனிதர்களின் இத்தகைய செயல்கள், தேசப்பற்று என்பது ஒவ்வொரு குடிமகனின் ரத்தத்திலும் ஊறியிருக்கிறது என்பதை உலகிற்கு பறைசாற்றுகின்றன. அந்த ஆட்டோ ஓட்டுநரின் சமயோசித புத்திக்கும், தேசியக் கொடிக்கு அவர் அளித்த கௌரவத்திற்கும் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
