கோவையில் இருந்து சிறுமியை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்ஸ்சாவில் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி துணி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்ற சிறுமி திரும்பி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் துணிக்கடையின் உரிமையாளரின் மகனான முகமது அயாஸ் சிறுமியை காதலிப்பதாக கூறி வந்ததும் சிறுமியை காஷ்மீருக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

உடனே காஷ்மீர் போலீசாரை தொடர்பு கொண்டு சிறுமி மற்றும் முகமது அயாஸை கோவைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். முகமது அயாஸ் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதன் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது அயாஸை கைது செய்தனர்.