விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 28-ம் தேதி இறுதி நாள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை இயக்க ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இறுதி நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதியே டெண்டர் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.