சிம்மம் ராசி அன்பர்களே,

இந்த தைரியமாக செயல்பட்டு சாதனை படைக்கும் நாளாக இருக்கும். யோசித்து எந்த செயலையும் செய்வது நல்லது. சந்திராஷ்டமம் இருப்பதால் சில பணிகள் உங்களுக்கு தொந்தரவு தடை தாமதம் போன்றவற்றை ஏற்படுத்தும். கடன்களுக்கு பதில் சொல்லும் போது கவனமாக இருங்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரிடமும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். பஞ்சாயத்துகளில் கலந்து கொள்ள வேண்டாம்.

குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவது நல்லது. எதிலும் அவசரப்பட வேண்டாம். எதையும் சமாளித்து திறமையால் வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான போட்டிகள் விலகும். வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார்கள். இன்று பெண்கள் அவசரப்படாமல் உங்கள் பணிகளை மட்டும் செய்வது நல்லது. உத்தியோகத்திற்கு செல்பவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். பெண்களுக்கு இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சக நண்பர்களை அனுசரித்துக் செல்ல வேண்டும். சந்திராஷ்டம முடியும் வரை பொறுமை காக்க வேண்டும். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும். மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம் மற்றும் நீல நிறம்