சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று தயவுசெய்து யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். அதிகாலையில் அனுகூலமான செய்திகள் வரும். நல்ல நண்பர்களின் சேர்க்கை இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படும் சூழல் உள்ளது. வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். வரன்கள் வாயில் தேடி வரும். இன்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடம் மாற்றங்களால் அவதிக்குள்ளாவீர்கள். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். சிரமங்கள் தீரும். பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். இந்த இனிய நாளை அற்புதமாக கொண்டாட முடியும். இன்று மாணவர்கள் கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கல்வியில் வெற்றி பெறும் சூழல் பிரகாசமாக உள்ளது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6, 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்