கடகம் ராசி அன்பர்களே,

இன்று அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்ய வேண்டாம். உங்கள் வேலை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது. முன்னோர் சொத்துக்கள் கையில் கிடைக்கும் சூழல் உள்ளது. சந்திராஷ்டமம் உள்ளதால் சில பணிகள் காலதாமதமாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபடுவது நல்லது. வாக்குறுதிகள் யாருக்கும் கொடுக்க வேண்டாம். புதிய பதவி பொறுப்புகள் தேடி வரும். இன்று எதிலும் முயற்சி செய்து முன்னேற வேண்டும். மனசோர்வு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. சிலர் எதிர்த்து பேசுவார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். இன்று பெண்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். யோகமான நாளாகவே இருக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். இன்று மாணவர்களுக்கு எது சரி எது தவறு என்று சரியாக திட்டமிடுதல் வேண்டும். படிப்பில் அக்கறை வேண்டும். யோசித்து எது செய்தாலும் முன்னேற்றம் ஏற்படும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்