மிதுனம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உயர் அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. கடுமையான உழைப்புக்கேற்ற நல்ல பெயர் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படலாம். மற்றவர்களின் சொல் கேட்டு எதிலும் ஈடுபட வேண்டாம். தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். யோகமான நாளாக உள்ளது. அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வரக்கூடும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் எடுத்த காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் வெற்றி காண்பீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: நான்கு மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்