சிம்ம ராசி அன்பர்களே,

இன்று தன வரவு சீராக இருக்கக்கூடும். குடும்ப பிரச்சினை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். குடும்பத்தினரின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடனை அடைக்க கடுமையாக உழைப்பீர்கள். பிரச்சனைகளை முற்றிலுமாக சமாளித்து விடுவீர்கள். இன்று மாற்று மதத்தினர் கை கொடுத்து உதவுவார்கள்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். இன்று உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும். புதிய செயல்களில் ஈடுபடும் போது கவனமாக இருங்கள். திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் காணலாம். காரிய வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். மாணவர்கள் கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள்.

பெண்களுக்கு வீட்டு வேலை இருந்து கொண்டே இருக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. தடைகளை உடைத்து எறிந்து உங்களால் வெற்றி பெற முடியும். திருமண வரன்கள் கூடிவரும். இன்று விஷ்ணு பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்