கடக ராசி அன்பர்களே,

இன்று மிகவும் நேர்மையாக நடந்து கொள்ளக் கூடிய நாளாக இருக்கும். எல்லோர் மனதிலும் இடம்பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிக்க கூடிய சூழல் இருக்கிறது. புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடும். இன்று எதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள். பணவரவு தாராளமாக உள்ளது. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் கவனமாக செயல்படுங்கள்.

இன்று பெண்கள் குடும்பத்திற்கு வேண்டியதை மட்டும் வாங்குங்கள். சேமிப்பை அதிகாரியுங்கள். இன்று மாணவர்கள் புதிதாக சிந்திப்பீர்கள். காரியங்கள் கைகூடும். சாதகமான நல்ல பலன் ஏற்படும். கல்வி மீது முழு அக்கறை ஏற்படும். இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3, 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்