சிம்ம ராசி அன்பர்களே,

இந்த கண்டிப்பாக நீங்கள் எதிலும் பொறுமையாக ஈடுபட வேண்டும். காசு பணத்தை பத்திரப்படுத்தி சேமிப்பது நல்லது. இன்று சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். இடமாற்றம், வீடு மாற்றம் போன்ற சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் தடை ஏற்படும்.

கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படக்கூடும். மனம் மகிழும் படியான நிகழ்ச்சிகள் கண்டிப்பாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும். யாரிடமும் கடன் வாங்க வேண்டாம் இன்று பெண்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவை எடுக்க வேண்டும்.

எது சரி எது தவறு என்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது. இன்று மாணவர்கள் சக நண்பர்களை அனுசரித்து செல்லுங்கள். கண்மூடித்தனமாக விளையாட வேண்டாம். கல்வி மீது அக்கறை கொள்ள வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்