கன்னி ராசி அன்பர்களே,

இன்று வியாபார விரோதங்கள் விலகி செல்லும். அடுத்தவர்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கக்கூடும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்ப செலவுகள் ஒரு பக்கம் கூடிவிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.

நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். பயணங்களின் போது கவனம் தேவை. சாமர்த்தியமான பேச்சு உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கும். எது சரி எது தவறு என்று திட்டமிடுவது நல்லது.

பெண்கள் நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுங்கள். இன்று மாணவர்கள் துணிச்சலுடன் சில பணிகளை மேற்கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்