கடக ராசி அன்பர்களே,

இன்று காலையிலேயே உங்களுக்கு நல்ல செய்தி வரும். திட்டமிட்டு சில பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற முடியும். தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் விலகி செல்லும். திட்டமிடாமல் செய்த காரியத்தில் கூட வெற்றி கிடைக்கும். உறவினர்களால் விரயம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றிக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் உருவாகும். பிள்ளைகளால் இன்று பெருமை உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். இன்று மாணவர்களுக்கு புதுப்புது விஷயங்கள் தோன்றும். கல்வி மீது முழு அக்கறை இருக்கும். இன்று பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 3, 6 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்