மிதுன ராசி அன்பர்களே,

இன்று புது புது சம்பவங்கள் இல்லத்தில் நடக்கும். மற்றவர்கள் உங்களை எளிமையாக புரிந்து கொள்வார்கள். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்தி காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். விரயங்கள் இருந்தாலும் சேமிப்பு அதிகரிக்க வேண்டும். வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். விருந்து கேலிக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.

வாய்ப்புகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றமான வாழ்க்கை அமையும். பெண்களுக்கு சீரான முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும். பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.

இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். இன்று மாணவர்கள் புரிதல் உணர்வுடன் செயல்படுவீர்கள். கல்வி மீது அக்கறை ஏற்படும். முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 2, 6 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்