ரிஷப ராசி அன்பர்களே,

இன்று செல்வ நிலை சீராக உயரும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். மருத்துவ செலவுகள் குறையும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகமாக இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்குவதற்கான சூழல் உள்ளது. கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது.

பெண்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது சிறப்பு. யோசித்து செயலாற்றுங்கள். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். கவனத்துடன் படிப்பது நல்லது. இன்று சித்தர்களின் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3, 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்