மேஷ ராசி அன்பர்களே,

இன்று தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்லக்கூடும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடருவீர்கள். இன்று அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அனைவரிடமும் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவால் செலவு இருக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள்.

வலிய சென்று உதவுவதால் வீண் பழி ஏற்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. பெண்கள் இன்று பொறுமையுடன் செயல்படுங்கள். இன்று மாணவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக புரிந்து கொண்டு பேசுங்கள்.

கோபத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பெற்றோரிடம் கடிந்து கொள்ள வேண்டாம். இன்று காலை சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2, 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்