குபேரர் சிலையை வீட்டிலும் கடைகளிலும் பலர் வைத்திருப்பார்கள். பலர் செல்வம் பெருகும் என்ற ஒரே எண்ணத்துடன் குபேரர் சிலையை வைத்திருப்பார்கள். ஆனால் குபேரர் சிலையை எந்த வடிவத்தில் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பது பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் அதன்படி எந்த வடிவத்தில் இருக்கும் குபேரர் சிலையை வைத்து வழிபட்டால் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  • நின்று கொண்டு சிரித்தபடி இருக்கும் குபேரர் சிலையை வீட்டில் வைத்திருந்தால் மகிழ்ச்சியும் செல்வமும் குறைவில்லாமல் இருக்கும்.
  • கால்களை மடித்து அமர்ந்தபடி தனது பெரிய வயிற்றை காட்டிக் கொண்டிருக்கும் குபேரரை வீட்டில் வைத்திருந்தால் நல்லிணக்கம், நிலையான தன்மையை வீட்டில் தக்க வைக்க முடியும்.
  • லேசாக சாய்ந்து கொண்டு சிரித்தபடி இருக்கும் குபேரரை வீட்டில் வைத்திருந்தால் ஆரோக்கியம், அமைதி, ஓய்வு போன்றவை கிடைக்கும்.
  • மூட்டையை சுமந்தபடி இருக்கும் குபேரரை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருக துணையாக இருக்கும்.

  • மேலே தூக்கிய இரண்டு கைகளில் பணம் நிறைந்த கிண்ணத்தை தாங்கியபடி இருக்கும் குபேரரை வீட்டில் வைத்திருந்தால் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும்.
  • குழந்தைகளுடன் இருக்கும் குபேரரை வீட்டில் வைத்திருந்தால் செல்வ வளம், குழந்தை பேறு, அதிர்ஷ்டம் போன்றவை கிடைக்கும்.