மீன ராசி அன்பர்களே,

இன்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் நாள் என்று சொல்ல முடியும். உறவினர்கள் நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தைரியமாக எந்த செயலிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். காரியத்தடை தாமதம் விலகி செல்லும். வீன் அலைச்சலை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று எதிலும் கவனமாக இருக்கவும்.  வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சூழல் மிகச் சிறப்பாக இருக்கிறது. எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெளிநாடு சென்று பணிபுரியும் யோகம் இருக்கிறது. ஆக்கப்பூர்வமான யோசனை தோன்றும். சகோதர சகோதரிகளுக்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று பெண்களுக்கு பின் தங்கிய நிலை மாறும். முன்னேற்றமான வாழ்க்கை உள்ளது. மாணவர்களுக்கு இன்று சிறந்த மாணவர்கள் என்ற பெயரை எடுக்கும் சூழல் உருவாகும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். லட்சிய நோக்கோடு கல்வியை அமைத்துக் கொள்வீர்கள். இன்று விஷ்ணு பெருமாள் வழிபாட்டு மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  : இரண்டு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்