கும்ப ராசி அன்பர்களே,

இன்று அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். யாருக்காகவும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். யாருக்காகவும் எந்த ஒரு உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் மட்டும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பற்று வரவுகளை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். புதியவர்களை நம்பி எதிலும் ஏமாற வேண்டாம்.

இன்று உத்யோகத்தில் இருப்பவர்கள்  முயற்சிகளின் மூலம் முன்னேற்றத்தை காணலாம்.இன்று முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனமாக இருங்கள். பொறுமையுடன் இருப்பது நல்லது. அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள். ஆன்மீக செலவுகள் இருக்கக்கூடும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப்பெறும்.

பெண்கள் இன்று மன அழுத்தத்தில் இருந்து விடை பெறுவீர்கள். யாருடைய பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிர்ஷ்ட எண்   : ஆறு மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்